- Details
- 4views
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இரு நாள் நடமாடும் சேவை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி அவர்களின் பங்கேற்புடன் (17.07.2026) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
- Details
- 5views
எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்வதற்கு மட்டக்களப்பு தயாராகிறது: துறைசார் நிபுணர்கள் பங்கேற்ற எல் நினோ (El Niño) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் எல் நினோ (El Niño) காலநிலை தாக்கங்களை முன்னெச்சரிக்கையுடன் எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை வலுப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட எல் நினோ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (13.07.2026) மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.- Details
- 5views
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கான வீட்டு திட்ட காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ரீ.சுபாஸ்கரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (06.07.2026) இடம் பெற்றது.
- Details
- 4views
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் (0707.2026) பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
- Details
- 5views
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள நெல் உலர்த்தும் இயந்திரம் தொடர்பான கலந்துரையால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் ஏற்பாட்டில் (06.07.2026) பழைய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.





