1"நேர்மையான கலாச்சாரம் - கிளீன் ஶ்ரீலங்கா" தேசிய நேர்மை வாரம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
"நேர்மையான கலாச்சாரம் - கிளீன் ஶ்ரீலங்கா" என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நேர்மை வாரம் இன்று (ஜூலை 27) முதல் ஜூலை 31 வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

1மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை  வலுப்படுத்தி உள்ளூர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநிதன் அவர்களின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  (23.07.2026) நடைபெற்றது.

1மட்டக்களப்பில் பாதுகாப்பான புலம் பெயர்வு மற்றும் மனிதக்கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு
 பழைய மாவட்ட செயலகத்தில்  (22.07.2026) இடம் பெற்றது. பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதுடன், மனிதக் கடத்தலைத் தடுக்கும் சமூக அடிப்படையிலான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் எட்டு மாத காலத்திற்கு  இவ் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

1மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் அரச உயர் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு (Capacity Building) செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில்  (22.07.2026) இடம் பெற்றது.

1முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் – 2026-ஐ முன்னிட்டு, குழந்தைகளின் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் மாவட்ட மட்ட கலந்துரையாடல்  (17.07.2026) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.