- Details
- 4views
மட்டக்களப்பு மாவட்ட விசேட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆர்.சிவநேசன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 11.06.2026அன்று இடம்பெற்றது.
- Details
- 6views
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களின் புனரமைப்பு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு 09.06.2026 அன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
- Details
- 4views
இன ஐக்கியத்தினை பேணும் வகையிலும் மாற்று மதங்களில் நம்பிக்கையினை கட்டியெழுப்பும் வகையிலும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மங்களகம சுனேத்ராராமய விஹாராதிபதியும் மட்டக்களப்பு மாவட்ட பௌத்த சாசன பாதுகாப்பு சபையின் செயலாளருமான வணக்கத்திற்குரிய கரபுடுகல இந்தரதன தேரரின் வெசாக் தின சிறப்பு தர்மதேஷன சொற்பொழிவு நடைபெற்றது.
- Details
- 3views
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு பிரிவிற்க்கான பிறப்பு இறப்பு பதிவாளர் பிரிவிற்கும் மண்முனை தென் எருவில் பற்று பிரிவிற்குமான பொது விவாக பதிவாளர் பிரிவிற்கான பிரதேச பதிவாளரும், மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலகப் பிரிவின் மகிழவட்டவான், பிரிவிற்கான பிறப்பு இறப்பு பதிவாளர் பிரிவிற்கும் வவுணதீவு பொது விவாக பதிவாளர் பிரிவிற்குமான பிரதேச பதிவாளரும் இன்றைய தினம் (03) திகதி முதல் பதிவாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
- Details
- 5views
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின் போது புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தினையும் ஜனாதிபதி அவர்கள் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளார்.




