1

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில்  மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத்  அவர்களின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட  செயலக மாநாட்டு மண்டபத்தில் 24.03.2026 அன்று திகதி  இடம் பெற்றது.

1

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் விநியோக நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 19.03.2026 அன்று இடம் பெற்றது.  மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வைத்தியசாலை, குடிநீர்வழங்கள், விவசாயம், மீன்பிடி மற்றும் பல தேவைகளுக்க முன் உரிமை அடிப்படையில் வழங்குவதற்கு இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

1

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தினை மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு தேவையான பசளைகளை வழங்குவதற்கான முன்னாயத்த  கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ் அவர்களது தலைமையில்  தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் ஏற்பாட்டில்   புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 18.03.2026 அன்று இடம் பெற்றது.

1

மட்டக்களப்பு மாவட்டத்தின்  தேசத்தை கட்டி எழுப்புகின்ற  வளமான கிராமம் சமூக உற்பத்தித்திறனுக்கான மாதிரி கிராமங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு மடடக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சத்துருக்கொண்டான் லங்காபுரக்கிராமத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் 16.03.2026 அன்று இடம் பெற்றது.

1

"சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத்தின் மூலம் ஒரு பசுமையான தொழில் முனைவோரை உருவாக்குவோம்" எனும் தேசிய செயல் திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர்  ஜீ. பிரணவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ்   மாவட்ட உற்பத்தித்திறன் இணைப்பாளர் இ.புவனேந்திரன் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 12.03.2026 அன்று இடம் பெற்றது.