1

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர்  ஜீ.பிரணவன் அவர்களின் தலைமையில்  மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 26.02.2026 அன்று  இடம்பெற்றது.

1
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழு கூட்டத்தில் அரசியல் அளுத்தங்கள் இன்றி அரச அதிகாரிகள் சுயாதினமாக செயற்பட வேண்டும் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

1
மட்டக்களப்பில் சாரணியத்தின் தந்தை சேர் பேடன்பவலின் 169வது ஜனன தின நிகழ்வை முன்னிட்டு  மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்க தலைவர் ஏ.நிசாந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரணர் கிளை தலைவருமான ஜே.எஸ் அருள்ராஜ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். உலகளாவிய ரீதியில் சேர் பேடன்பவலின்  பிறந்த தினத்தினை முன்னிட்டு சாரணியர்களினால் பல நிகழ்வு இடம் பெற்று வருகின்றன.

1

சொந்தமாக இருக்க இடம் அழகான வாழ்க்கை  எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பயனாளிகளுக்கான  காசோலைகளை இன்று வழக்கி வைக்கப்பட்டது.

1

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள்  கலந்துரையாடல் ஒன்றை புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (18) மேற்கொண்டார்.