- Details
- 42views

மட்டக்களப்பு மாவட்டத்தில் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தில் பதிவு செய்த இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பதிவு செய்த நபர்களில் 500 நபர்கள் நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டு அதில் தேர்வு செய்யப்பட்ட 200 பேரில் முதல் கட்டமாக 70 நபர்களுக்கு முன்னனி வர்த்தக ஸ்தாபனமான கீல்ஸ் வர்த்தக நிறுவனத்தில் கடமையாற்றுவதற்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.
- Details
- 4views

மட்டக்களப்பில் "விளையாட்டினூடாக பாதுகாப்பான புலம் பெயர்வு " எனும் தொனிப்பொருளில் விழிப்பூட்டும் மகளீர்க்கான கபடி மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் வெபர் மைதானத்தி 05.02.2026 ம் திகதி இடம் பெற்றது.
- Details
- 4views

78 வது சுதந்திர தின வாரத்தினை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா மற்றும் முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் 03.02.2026 ம் திகதி சிரமதான நிகழ்வுகள் இடம் பெற்றன.
- Details
- 4views

இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 78 வது சுதந்திர தின நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில் 04.02.2026 ம் திகதி வெகு சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந்த், முப்படை உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், லயன்ஸ் கழக தலைவர் மனோகரன் உள்ளிட்ட கழக பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
- Details
- 4views

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீளடைவு அவசர உதவி கருத்திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மண்டபத்தில் 03.02.2026 ம் திகதி இடம் பெற்றது. மாவட்ட சமுர்த்தி பணிப்பாயர் எஸ். ராஜ்பாபு அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் தொடர்பான மீளாய்வு இடம் பெற்றது.





