- Details
- 4views

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு ஈர நிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் சுந்தரேசன் தலைமையில் 02.02.2026 ம் திகதி குருக்கள்மடம் ஐயனார் ஆலய வளாகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
- Details
- 4views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மிகவும் கோலாகலமாக புதிய மாவட்ட செயலக வளாகத்தில் 31.01.2026 ம் திகதி இடம்பெற்றது. மாவட்ட செயலகத்தின் மூஷிக விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பாரம்பரிய கலாசார முறைப்படி பூசைப் பொருட்கள், அறுவடை செய்த நெல் கதிர்கள், பாரம்பரிய விவசாய பொருட்கள் என்பன மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்டு, பாரம்பரிய முறைப்படி உப்பட்டி அடித்து பெறப்பட்ட நெல்லினை தூற்றி, அரிசிகுற்றிபொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனர்.
- Details
- 4views

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சிறுவர் உரிமை அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.மதிராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 29.01.2026ம் திகதி இடம் பெற்றது. இதன்போது மாவட்டத்தின் சிறுவர்களது உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
- Details
- 6views

மட்டக்களப்பு மாநகர சபையும் மட்டக்களப்பு பொது நூலகமும் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வுகள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் மாநகரசபை நகர மண்டபத்தில் 29.01.2026 ம் திகதி இடம் பெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
- Details
- 4views

பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பான மூன்று நாள் வதிவிட பயிற்சி செயலமர்வை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்கள் புதிய மாவட்ட செயலகத்தில் 27.01.2026 ம் திகதிவழங்கி வைத்தார்.
ரெசிலின்ஸ் நிறுவனத்தில் (Resilience) நிதி ஒதுக்கீட்டில் அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பான செயலமர்வானது தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் என 29 அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டன.





