- Details
- 4views

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களினால் பெறுமதியான காசோலைகளை பயனாளிகளுக்கு பழைய மாவட்ட செயலகத்தில் 26.01.2026ம் திகதி வழங்கி வைத்தார். ழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் ஜீ.சுகுமாரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் பங்கு பற்றுதலுடன் தொழில் நுட்ப உத்தியோகர் எஸ். யதுஷாயினியின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு இடம் பெற்றன.
- Details
- 7views

கிழக்கு மாகாணத்திற்கான பிரதான பொங்கல் விழா 23.01.2026 ம் திகதி பாரம்பரிய முறைப்படி மிகவும் கோலாகலமாக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலர்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்தினசேகர அவர்களின் பங்குபற்றுதலுடன் களுமுந்தன்வெளி பொது மைதானத்தில் இடம்பெற்றது.
- Details
- 4views

மட்டக்களப்பு மாவட்டத்தில் "விவசாய மறுமலர்ச்சியின் விடியல்" தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.ஏப்.ஏ. சனீர் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் 21.01.2026 ம் திகதி இடம் பெற்றது. விவசாய அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறை படுத்தப்படவுள்ள "விவசாய மறுமலர்ச்சியின் விடியல்" தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் 2025 ஆண்டுக்கான விவசாய முன்னேற்ற மீளாய்வு தொடர்பாகவும் 2026 ஆண்டுக்கான விவசாய அபிவிருத்தி தொடர்பான திட்டமிடல் என்பன கவணம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தத்தாகும்.
- Details
- 4views

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டமானது மாவட்ட அசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை நாட்டுக்கான பிரதி பணிப்பாளர் ரொபட் ஒலிவர் பங்கு பற்றுதலுடன் புதிய மாவட்ட செயலகத்தில் 22.01.2026 ம் திகதி இடம் பெற்றது. இதன் போது மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் தோட்டத்தின் முறைமையினுடாக பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு மற்றும் இவ்வருடங்களில் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
- Details
- 13views

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையமானது ஹிஜ்ரா நகர், தியாவெட்டுவான் பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாடுச்சபையின் பணிப்பாளர் நாயகம் கே.கே.எஸ் கொத்தலாவல பங்கு பற்றுதலுடன் போதைப்பொருள் முற்தடுப்பு மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் ஏற்பாட்டில் இன்று 19.01.2026 திறந்து வைக்கப்பட்டது





