1

மட்டக்களப்பு மாவட்டத்தில் "முழு நாடும் ஒன்றாக"  "ரட்டம எகட்ட "  விஷபோதைப் பொருள் தடுப்பு வார  அங்குராப்பண நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில்  மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  03.03.2026 அன்று இடம் பெற்றது.

1
பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புதுமுகப் பயிற்சி  மட்டக்களப்பில் இடம் பெற்றது. பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால்  மட்டக்களப்பில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட    முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களாகளுக்கான புதுமுகப் பயிற்சி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 03.03.2026 திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

1

மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின்  செயலாளர் எம்.டபில்யூ.ஜீ திசாநாயக்க அவர்களின் தலைமையில்  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் எஸ்.கரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27.02.2026  அன்று இடம் பெற்றது.

1

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் "முழு நாடும் ஒன்றாக"   தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஸ் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் 01.03.2026 அன்று இடம் பெற்றன.

1

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான சேவைகளை வழங்குதல் தொடர்பான கலந்தரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் 27.02.2026 அன்று  இடம் பெற்றது.