1

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி  உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையில்   போதைப்பொருள் முற்தடுப்பு மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 16.01.2026 ம் திகதி இடம் பெற்றது.

1

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டமானது  கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில்  மாவட்டத்தின்   ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 14.01.2026 ம் திகதி இடம் பெற்றது.

WhatsApp Image 2026 01 13 at 13.21.59

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அக்ஷன் யுனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தினரினால் அவசர அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்தும் உபகரணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களிடம் 13.1.2026 ம் திகதி கையளித்தனர்.

1

OneGov கணனி முறைமையினை வடிவமைத்தவர்களுக்கு  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களினால் புதிய மாவட்ட செயலகத்தில் 13.01.2026 ம் திகதி கெளரவம் வழங்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிளின் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களினால்  உருவாக்கப்பட்ட OneGov  கணனி முறைமையானது  நடைமுறைப்படுத்தப்பட்டது.

1

மட்டக்களப்பில் விசேடதேவைக்குரிய நபர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைக்கும்   நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின். தலைமையில் உதவி மாவட்ட  செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி ச.கோணேஸ்வரன் அவர்களின்  ஒருங்கிணைப்பில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (05.01.2026) வழங்கி வைக்கப்பட்டன.