- Details
- 36views

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு அமைய போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும் நோக்கில் 'முழு நாடுமே ஒன்றாக' எனும் தேசிய செயற்பாட்டுத்திட்டம் இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட நிலையில்இ மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
- Details
- 10views

வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையினால் ஏற்படும் தாக்கங்களுக்கான முன்னெச்சிரிக்கை மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் 30.10.2025 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அணர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பருவப் பெயர்ச்சி மழையினால் ஏற்படும் வெள்ள அபாயம் உட்பட அதனோடு தொடர்புடைய அனர்த்தங்களை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னாயத்தங்கள் தொடர்பாக ஆரயப்பட்டது.
- Details
- 7views

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்ற போது 994 மில்லியன் ஒதுக்கீட்டில் 1876 திட்டங்களுக்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 30.09.2025ம் திகதி இடம் பெற்றது.
- Details
- 6views

23.10.2025 ஆந்திகதி கொழும்பு பண்டார நாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி சுற்றுச் சூழல் விருது வழங்கும் நிகழ்வில்இ தேசிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளை வென்ற மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
- Details
- 8views

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு,26.9.2025ம் திகதி தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக அலுவலகத்தில் ஆரம்பித்தார் . மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி ஜே. ஜே. முரளிதரன் 25.09.2025 முதல் பொதுச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான ஜே. எஸ். அருள்ராஜ் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை 15.09.2025 அன்று அனுமதி வழங்கப்பட்டது





