1

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராம புரங்களில் சிறுவர் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் 13 முன்பள்ளி (பாலர்) பாடசாலைகளைப் பராமரித்து வரும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனை அன்மையில் மாவட்ட செயலகத்தில் வைத்து சந்திப்பொன்றினை மேற்கொண்டார்கள் . நாட்டில் யாழ்ப்பாணம், களுத்துறை, இரத்தினபுரி, மன்னார் மட்டக்களப்பு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 67 முன்பள்ளி பாடசாலைகளை பராமரித்து வரும் FACE என அழைக்கப்படும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பானது பின்தங்கிய கிராமப்புறங்களில் உள்ள பாலர் பாடசாலைகளைத் தெரிவு செய்து இங்கு கல்வி பயிலும் பாலர்களுக்கான சத்துணவு, சீருடை, கற்றல் உபகரணங்கள் போன்றவற்றை வழங்குவதுடன் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான மாதாந்த சம்பளம் களையும் வழங்கி வருகிறது.

2

மட்டக்களப்பில் ஒல்லாந்தர் கோட்டையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தில் நினைவு தின நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்கு பற்றுதலுடன்   பிரதி பிராந்திய இணைப்பாளர்  திருமதி யதுசியா முரளி தலைமையில் இன்று  (02) இடம் பெற்றது. சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு  வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் அலுவலகத்தில் தீபமேற்றி  நினைவு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1

மட்டக்களப்பு திறந்தவெளிச் சிறைச்சாலையில் நிறுவப்பட்டுள்ள நெசவுப் பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன்  தலைமையில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு திருப்பெரும்துறை திறந்தவெளிச் சிறைச்சாலையில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக கிராமிய தொழில்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் றிசானா சாரங்கன்.

1

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  செயிரி வாரம் நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 01.09.2025 ம் திகதி இடம் பெற்றது. 'க்ளின் சிறிலங்கா' தேசிய திட்டத்துடன் இணைந்து செயிரி வாரத்தினையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

1.1

இலங்கையர்தினம் தேசிய விழாவிற்கான பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் ஒழுங்குபடுத்தலில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 01.09.2025 ம் திகதி  இடம் பெற்றது.