- Details
- 7views

போஷாக்குத் தொடர்பாகத் தெளிவூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 21.08.2025 ம் திகதி நடைபெற்றது. தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சித் தொடரின் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கு போஷாக்கின் முக்கியத்துவம் குறித்து தெளிவு படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு அமைந்தது.
- Details
- 7views

வாழும் கலை அமைப்பின் தலைமைத்துவப் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. வாழும் கலை அமைப்பின் தலைமைத்துவப் பயிற்சியை நிறைவு செய்த 14 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 9views

துடிப்பான குடிமகன் - வெற்றி பெற்ற தேசம்' எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களுக்கான உடற்பயிற்சி நிகழ்வு மாவட்டத்தில் இடம்பெற்றுவருகின்றது. விளையாட்டு வாரத்தினை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த உத்தியோகத்தர்களுக்கான உடற்பயிற்சி நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
- Details
- 11views

பங்குச்சந்தை CSE Mobile App பயன்பாடு தொடர்பாக மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் 21.08.2025 ம் திகதி இடம் பெற்ற நிகழ்வு கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளையின் அதிகாரி எம்.ஜே.எம்.அலீமுடீன் தலைமையில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
- Details
- 27views

Smart Kids பாலர் பாடசாலையின் முகாமையாளர் திருமதி.வீ.மோகநாதன் தலைமையில் மட்டக்களப்பு லேக் வீதியில் அமைந்துள்ள பாலர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்த நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் கலந்து சிறப்பித்தார்.





