WhatsApp Image 2025 08 12 at 14.09.48

அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்' எனும் தொலைநோக்குடன் தேசிய உற்பத்திதிறன் செயலகத்தின் கிளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026 ஆண்டுக்கான போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள் 12.08.2025 திகதி அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி  ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் இந்த விருதுகள் வழங்கும் போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள்  மாவட்டத்தில் இடம்பெறுகின்றது.

WhatsApp Image 2025 08 11 at 10.21.32 2

மட்டக்களப்பில் தேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி வார நிகழ்வானது  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில்  உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வீ.. முரளிதரன் ஏற்பாட்டில் லைட் ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில்  09.08.2025 திகதி அன்று இடம் பெற்றன.

WhatsApp Image 2025 07 29 at 11.46.26

மட்டக்களப்பில் உலக மனித விற்பனைக்கு எதிரான தின நிகழ்வுகள் இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் (ICMPD) புலம்பெயர் தகவல் மையத்தின்  (MIC) ஏற்பாட்டில்  29.07.2025 அன்று இடம் பெற்றது. இந் நிகழ்வில்  பிரதம அதிதிகளாக நியூசிலாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரதி உயர்ஸ்தானிகர்  கப்ரியலா ஐசாக், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் நியுசிலாந்து தாதுவராலய உயர் அதிகாரி பிரஷ்சி கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 07 30 at 12.17.29

கிழக்கு மாகாணத்தை வலுப்படுத்துவதனூடாக சாத்தியமான பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்  தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனித்தி  தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்ணசேகர மற்றும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மிமான மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகள் நாட்டிற்கான உலக வங்கியின் முகாமையார் ஜிவேர்ஜ் சார்கசியன் (Gevorg Sargsyan) ஆகியோரின் பங்ககுபற்றுதலுடன்புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 30.07.2025 அன்று திகதி இடம் பெற்றது.

WhatsApp Image 2025 07 26 at 21.21.28

மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் சூர்யசக்தி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் இன்று எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.