WhatsApp Image 2025 09 01 at 12.23.26

Work Force Sri Lanka நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் முழு நாள் செயலமர் மட்டக்களப்பில் இடம் பெற்றது. மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் Work Force Sri Lanka எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உயர் தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டத்தினை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாக கிழக்கு மாகாண மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் முழு நாள் நிகழ்வு 01.09.2025 ம் திகதி இடம்பெற்றது.

WhatsApp Image 2025 08 29 at 12.45.05 1

தேசிய தொழில் தகமை மட்டம் மூன்றினை NVQ - 3) பூர்த்தி செய்த மின்னியலாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் தொழில் தகமைக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் ஜயசூரியன் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அதிசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் ஆகிய இருவரும் கலந்து சிறப்பித்த நிகழ்வினை மாவட்ட செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.சிவகுமார் ஒழுங்கமைத்திருந்தார்.

WhatsApp Image 2025 08 29 at 14.35.19 1

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் ஏற்பாட்டில் அரச கரும மொழிகள் அமுலாக்கத்தில் மூன்று வருட கால மொழிக் கொள்கைக்கான மொழித் திட்டமிடல்  தொடர்பாகத் தெளிவூட்டும் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 28.08.2025 ம் திகதி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2025 08 27 at 14.59.49

வளமான, பொருளாதார பலம் மிக்க நாட்டை கட்டியெழுப்பும் தொனிப்பொருளிற்கு அமைய ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நாடாளாவிய ரீதியில் இடம் பெற்றுவரும் தெளிவூட்டல் செயற்பாட்டிற்கு அமைய தென்னை பயிற்செய்கை சபையின் மட்டக்களப்பு தென்னை அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் செய்முறைப் பயிற்சி ஊடாக குறித்த தெளிவுபடுத்தல் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்ற செயலமர்விற்கு வளவாளராக மட்டக்களப்பு தென்னை பயிற்செய்கை சபையின்  பிரதி முகாமையாளர் (விரிவாக்கல்) ரவிச்சந்திரன் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டனர்.

WhatsApp Image 2025 08 27 at 22.16.47

மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக வளாக அருள்மிகு ஸ்ரீ மூஷிக விநாயகர் ஆலய கும்பாபிஷேக ஒரு வருட பூர்த்தி ஆவணி சதுர்த்தி பெருவிழா - 2025 இன்று வெகு விமர்சையாக இடம் பெற்றது. புதிய மாவட்ட செயலக வளாகத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மூஷிக விநாயகப் பெருமானுக்கு ஒரு வருட கும்பாபிஷேக பூர்த்தி தின ஆவணி விநாயகர் சதுர்த்தி பெருவிழாவானது 27.08.2025 ம் திகதி புதன்கிழமை சுப முகூர்த்த வேளையாகிய பகல் 12.00 மணியளவில் 108 சங்குகளினால் விநாயகப் பெருமானுக்கு சங்காபிஷேகம் இடம் பெற்றது.