WhatsApp Image 2025 08 20 at 11.37.35

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர பிரிவில், திராய்மடு பிரதேசத்தில் அமைந்துள்ள புதிய மாவட்ட செயலக  வளாகத்தில் அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் இயங்கி வந்த மாவட்ட செயலகம் 2024 ஜூன் மாதத்தில் இருந்து திராய்மடு பிரதேசத்தில் உள்ள பாரிய நிலப்பரப்பில் மிகவும் விஸ்தீரணமாக அமைக்கப்பட்ட கட்டடத்தில் இயங்கி வருகின்றது.

WhatsApp Image 2025 08 20 at 14.34.09

இலங்கை கிரிக்கட் சபையும், இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள், பாடசாலை மாவட்ட அணிகள், மாவட்ட பயிற்சியாளர்கள், மாவட்ட கிரிக்கட் சங்கங்களுக்கு  இன்று புதன்கிழமை 20.08.2025 ம் திகதி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

WhatsApp Image 2025 08 19 at 12.20.56

Clean Srilanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சின் நிதி அனுசரணையுடன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாரளுமன்ற அலுவல்கள் அமைச்சும், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகியன இணைந்து மட்டக்களப்பு கல்வி வலய உளவளத்துணை ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்றுனர்களுக்கான வதிவிட பயிற்சி பட்டறையானது 18.08.2025 ம் திகதி மட்டக்களப்பு சர்வோதயா பயிற்சி நிலையத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட செயலக போதைப்பொருள் முற்தடுப்பு பிரிவு மாவட்ட  இணைப்பாளர் ப.தினேஸ் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

WhatsApp Image 2025 08 21 at 09.53.48 2

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவின் இரண்டாவது காலாண்டுக் கூட்டம் மட்டக்களப்பு திராய்மடுவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களது தலைமையில் இடம் பெற்ற குறித்த காலாண்டு கூட்டமானது 19.08.2025 ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

WhatsApp Image 2025 08 15 at 09.28.31 1

என்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்ட  சிறுவனுக்கு நேரில் சென்று பண உதவி வழங்கிய மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் என்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மன் லியோன்சனின் வீட்டிற்குச் நேரில் சென்று அவரது சத்திர சிகிச்சைக்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆறு இலட்சம் பண உதவியை வழங்கி வைத்தார். அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவெப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் மாணவன் செல்வன் லக்ஷ்மன் லியோன்சன் ஒன்பது A தர சித்திகளைப் பெற்று சாதன. படைத்திருந்தார்.