- Details
- 5views

கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவிடம் முன்வைக்கப்பட்ட பொதுமக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில், பொதுமக்கள் தினம் இன்று (08) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
- Details
- 49views

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளாதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ரீ.ஜெய்தனன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 01.07.2025 அன்று இடம்பெற்றது.
- Details
- 35views

மட்டக்களப்பில் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறியும் வழிகாட்டலும் நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் மேற்பார்வையின் கீழ் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மேற்பார்வை உத்தியோகத்தர் ரீ. நிலோஷன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 30.06.2025 அன்று இடம்பெற்றது.
- Details
- 7views

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான உள வலுவூட்டல் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட உளவளத்துனை இணைப்பாளர் திருமதி சுபாநந்தினி உதயகாந்தின் ஒழுங்கமைப்பின் கீழ் பழைய மாவட்ட செயலகத்தில் 30.06.2025 அன்று இடம்பெற்றது.
- Details
- 18views

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27.06.2025 அன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நெல் அறுவடை காலப்பகுதி நெருங்கிவிட்டதனால் நெல் கொள்வனவு சபை நெற் கொள்வனவை ஆரம்பிக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் முன் வைத்ததுடன், சிறு மற்றும் பெரிய நீர்ப்பாசன குளங்களின் நீரினை பயன்படுத்தி விவசாயம் செய்யும் போது ஏற்படும் இடர்கள் தொடர்பாகவும், யானையினால் ஏற்படும் பயிர் சேதங்கள் மற்றும் யானை வேலி அமைக்க வேண்டியதன் அவசியம், காப்புறுதி கிடைக்காதமை , விவசாய வீதி அபிவிருத்தி போன்ற மேலும் பல விடயங்கள் இதன் போது விரிவாக ஆராயப்பட்டதுடன் மேலும் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கிவரும் பல்வேறுபட்ட பிரச்சனைகளான வெள்ளத்தினால் உடைவடைந்த குளங்கள் மற்றும் கால்வாய்களை மீள்கட்டுமானம், போன்ற மேலும் பல விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் பல தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டது.





