- Details
- 9views

மட்டக்களப்பு சமுர்த்தி மற்றும் அஸ்வெசும பயனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தல் தொடர்பான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் 17.06.2025 அன்று இடம்பெற்றது. சமுர்த்தி மற்றும் அஸ்வெசும பயனாளிகளின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கு சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மற்றும் பிரதேச அமைப்புக்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதனை நோக்காகக்கொண்டு தொழில்வாய்ப்புக்களை இனங்காணல், சந்தைப்படுத்தல்,ஏற்றுமதி சார்ந்த ஆலோசனைகள் இதன்போது நிபுணர்களினால் வழங்கப்பட்டன.சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சமுதாய இனம் அமைப்புக்களின் தலைவர்களுக்கு விழிப்புணர்வும் புதிய பெறுமதிசேர் ஏற்றுமதி பொருளாதாரத்தினை இனங்கண்டு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
- Details
- 9views

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் புதிய மாவட்ட செயலகத்தில் 16.06.2025 அன்று வழங்கி வைத்தார். உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் எம்.ஆர். நிஷா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
- Details
- 9views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெற்றோர்களின் உணர்வுகள் மற்றும் நடத்தைகளை கையாள்வதற்கான மனோகரி விழிப்புணர்வு செயலமர்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் புதிய மாட்ட செயலகத்தில் 13.06.2025 அன்று இடம்பெற்றது. மாவட்ட செயலத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உணர்வுகள் மற்றும் நடத்தைகளை கையாள்வதற்கான மனோகரி விழிப்புணர்வு செயலமர்வானது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது.
- Details
- 10views

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவமளிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறுபட்ட சேவையினை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் பிரதேச செயலக ரீதியாக இணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கான நியமன பத்திரம் வழங்கும் நிகழ்வும் சமாதான நீதிவான்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வும் 14.06.2025 அன்று மட்டக்களப்பில் மிகச் சிறப்பாக இடம்பெற்றபோதே மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினை பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
- Details
- 3views

வாழும் கலை அமைப்பினரினால் இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் 09.06.2026 அன்று புதிய மாவட்ட செயலகத்தில் வழங்கி வைத்தார்.





