WhatsApp Image 2025 04 08 at 16.13.47 1

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினால் முதல் முறையாக வெளியிடப்பட்ட, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சஞ்சிகையான "மீன் பாடும் சாரணியம்" சஞ்சிகை, இன்று திராய்மடு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவியாகவும் பணியாற்றும் திருமதி J.J. முரளிதரன் அவர்களிடம், மாவட்ட சாரணர் ஆணையாளர் திரு K. அமிதன் அவர்கள் இதனை கையளித்தார்.

WhatsApp Image 2025 04 07 at 13.22.48

மட்டக்களப்பில் நான்கு சபைகளுக்கான 3657 காப்புறுதி செய்யப்பட்ட  அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  அஞ்சல் திணைக்கள அதிகாரியிடம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 07.04.2025 அன்று கையளிக்கப்பட்டது. ஆரம்ப கட்டமாக மண்முனை மேற்கு, ஏறாவூர் நகர், மண்முனை தென் எருவில்பற்று, கோறளைப்பற்று மேற்கு ஆகிய சபைகளுக்கான காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் கையளிப்பு செய்யப்பட்டுள்ளன.

WhatsApp Image 2025 04 03 at 15.23.10

2025 உள்ளூர் அதிகாரசபை தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதனால் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அத்தாட்சிபடுத்தும் அலுவலர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 03.04.2025 அன்று நடைபெற்றது. தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள்   தபால்மூல வாக்களிப்பு  அத்தாட்சிபடுத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக தெளிவூட்டப்பட்டன. மேலும் வாக்குகளை அத்தாட்சிப்படுத்தும் படிமுறைகள் தொடர்பான விளக்கங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

WhatsApp Image 2025 04 04 at 15.42.28

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான   கலந்துரையாடலானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம் சுபியான் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.04.2025 இடம்பெற்றது.

WhatsApp Image 2025 04 02 at 14.33.31

மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனமானத்தினால் சுய தொழில் முயற்சியாளர்களின் மேம்பாட்டை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள "தையல் நிலையம்" மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபரினால் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் "சாமஸ்ரீ தேசமான்ய உ.உதயகாந்த் (JP) தலைமையில் இடம் பெற்ற திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக குறித்த தையல் நிலையத்தை அமைப்பதற்கு பிரதான அனுசரனையாளராக திகழும் சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எஸ்.ரமணதாஸ் மற்றும்  திருமதி.ரமணதாஸ், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா, வளர்ந்து வரும் இளம் தொழிலதிபரும் ஊடகவியலாளருமான ஜெபி ஜெனார்த்தனன்,  சமூக செயற்பாட்டாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான இராசலிங்கம் விக்னேஸ்வரன், தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் சிவகுமாரி செல்வராசா, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் (SEDD) திருமதி.ஜசோதா ராஜசேகரன், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் (NEDA) திருமதி.ஏ.எல்.எஸ்.ஹய்றியா, சமூக செயற்பாட்டாளர் தேசமான்ய ஏ.எல்.எம்.மீராஸாகிப், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வியாபார மேம்படுத்தல் உத்தியோகஸ்தர் நாகேந்திரன் கோகுலதாஸ் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.