WhatsApp Image 2025 04 16 at 14.28.37

ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 16.04.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக அமைச்சரவை அங்கீகாரத்துடன் "நேர்மையான இலங்கை" எனும் தொனிப்பொருளில் இலங்கையின் ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் 2025 - 2029 இனை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படவுள்ள உள்ளக அலுவல்கள் பிரிவே மட்டக்களப்பு திராய்மடுவில் அமைந்துள்ள மாவட்ட செயலக கட்டடத்தில் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2025 04 16 at 09.49.10 1

2025 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் பட்டத் திருவிழாவானது 15.04.2025 அன்று மாலை 3.30 மணி தொடக்கம் கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்றது. இப்போட்டியில் தனியாகவும் குழுவாகவும் போட்டியாளர்கள் பங்குபற்றினர். இப்போட்டியானது மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா.தனஞ்ஜெயன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இப்போட்டி நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

நாட்டில் இருந்து ஏற்றுமதிசெய்யப்படும் பல்வேறு விவசாய உற்பத்திகளில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கமுகு உற்பத்தி ஊக்குவிக்கப்படுகின்றது. இக்கமுகு அறுவடை விழா 10.04.2025 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின்  மட்டக்களப்பு மாவட்ட விரிவாக்கல் உத்தியோகத்தர் நர்த்தனா குகதாசன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் ஜே. ஜே. முரளிதரன் அவர்களின் தலைமையில் போரதீவுப்பற்று வம்மியடியூற்று கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஏ.பிரபாகரன் என்பவரது வீட்டுத்தோட்டக் காணியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

WhatsApp Image 2025 04 15 at 13.22.58

உள்ளூர் அதிகார சபை தேர்தலின் போது கடமையில் ஈடுபடவுள்ள கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலின் போது கடமையில் ஈடுபடும் கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி  செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 15.04.2025 அன்று  இடம்பெற்றது.

WhatsApp Image 2025 04 08 at 16.13.47 1

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினால் முதல் முறையாக வெளியிடப்பட்ட, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சஞ்சிகையான "மீன் பாடும் சாரணியம்" சஞ்சிகை, இன்று திராய்மடு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவியாகவும் பணியாற்றும் திருமதி J.J. முரளிதரன் அவர்களிடம், மாவட்ட சாரணர் ஆணையாளர் திரு K. அமிதன் அவர்கள் இதனை கையளித்தார்.