- Details
- 9views

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 28.03.2025 அன்று இடம்பெற்றது.
- Details
- 6views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பொதுத்துறையில் பணிப்பாய்ச்சலை உருமாற்றுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கைப்பேசி செயலி ஒருங்கமைப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி பாசறை பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27.03.2025 அன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் வழிகாட்டுதலில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந்த அவர்களின் மேற்பார்வையின் கீழ் நா.விஜயதாஸ் ஒருங்கமைப்பில் இடம்பெற்ற பயிற்சி பாசறையில் போரதீவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திரு. வி.துலாஞ்சனன் அவர்கள் வளவாடினார்.
- Details
- 3views
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 26.03.2025 அன்று இடம்பெற்றது. கிராமிய அபிவிருத்தி சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி பணியகத்தின் வழிகாட்டுதலின் கீழ் கிராமிய அபிவிருத்தித்திட்டம் தயாரிப்பதற்கு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி வழங்கப்பட்டது.
- Details
- 6views

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கிறிசலிஸ் நிறுவனமும் இணைந்து மகளீர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த விற்பனைக் கண்காட்சியும் சந்தையும் 26.03.2025 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. "நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்" எனும் தொனிப்பொருளில் கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள ஸ்ரீ முருகன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற விற்பனைக் கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
- Details
- 6views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 25.03.2025 அன்று மாலை இடம்பெற்றது. கிராத் ஓதலுடன் இப்தார் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் இப்புனித ரமழான் மாதத்தில் அன்பையும் பாசத்தையும் சகோதரத்துவதத்தினையும் மேலும் வலுச்சேர்க்கும் முகமாக இந்நிகழ்வு அமையப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன்போது கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெஹ் அவர்களினால் புனித ரமழான் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.





