- Details
- 9views

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி மிகவும் கோலாகலமாக மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது. திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமான பாரம்பரிய கலாசார பவனியில் மாட்டு வண்டியில் பாரம்பரிய முறைப்படி பூசைப் பொருட்கள், அறுவடை செய்த நெல் என்பன மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்டு, பாரம்பரிய முறைப்படி நெல் குற்றி பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனர். மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.சுதர்ஷினி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் விழாவிற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
- Details
- 27views

மட்டக்களப்பு மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளும் கலந்துரையாடல் 30.01.2025 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இக்கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
- Details
- 7views

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 28.01.2025 அன்று இடம்பெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களின் மேற்ப்பார்வையின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.
- Details
- 14views

நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான வேலைத்திட்டம் 30.01.2025 அன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.