- Details
- 4views
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி சமூக வலுவூட்டல் திட்டம் தொடர்பாக மாவட்ட மட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் நிகழ்வானது மாவட்ட அராங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 11.02.2025 அன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு , வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத் , எஸ். எம் நழிம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- Details
- 16views

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கல்வி கற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கு நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் திருமதி அருள்மொழி நிஷா அவர்களின் தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவக மாநாட்டு மண்டபத்தில் 08.02.2025 அன்று இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
- Details
- 7views

சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி பிரணவன் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி ச கோணேஸ்வரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 07.02.2025 அன்று நடைபெற்றது.
- Details
- 9views
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக சிறுவர் கழக உறுப்பினர்களின் செயற்திறனை ஊக்கப்படுத்துவதற்கான விளையாட்டுப் போட்டியானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் 08.02.2025 அன்று இடம்பெற்றது. மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் செரி (CERI) நிறுவனத்தின் விளையாட்டின் ஊடான விருத்தி திட்டத்தின் கீழ் ஒரு நாள் விளையாட்டுப்பயிற்சி நிகழ்வானது சிறார்களுக்கு வழங்கப்பட்டது.
- Details
- 11views

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 04.02.2025 அன்று மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது மாவட்ட செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டிற்காக உயிர் நீத்தோரை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.





