WhatsApp Image 2025 01 27 at 11.19.38

மட்டக்களப்பில் ஆயிரம் பூக்களை (சுவாகாஸ்) நடுவோம் சங்கத்தின்  இருநாள் விற்பனை கண்காட்சியானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் 27.01.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. பேராதனை தேசிய தாவரவியல் திணைக்களத்தின் நிதிஅனுசரணையில்  நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் செயற்திட்டமானது மட்டக்களப்பு பாடுமீன்கள் சுவாகாஸ் அழகு தாவர பூக்கள் வளர்ப்பு சங்கத்தின் தலைவர் வி. சுதாகரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

WhatsApp Image 2025 01 23 at 16.48.03

அகில இலங்கை திறந்த தேசிய பட்மின்டன் சுற்றுப்போட்டியானது மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இலங்கை பட்மின்டன் சங்கமும் கிழக்கு மாகாண பட்மின்டன் சங்கமும் இணைந்து இந்த சுற்றுப்போட்டியை நடாத்துகின்றது. எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்த தேசிய பட்மின்டன் சுற்றுப்போட்டியானது மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான கட்டிடத்தொகுதியில் உள்ள உள்ளக அரங்கில் கோலாகலமாக ஆரம்பமானது.

WhatsApp Image 2025 01 21 at 18.57.35

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பத்தினரின் வாழ்வாதார உதவிக்கான  நவீன தையல் இயந்திரம்    மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் 21.01.2025 அன்று வழங்கிவைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இந்தியா சென்று அங்கிருந்து மீண்டும் 2023 ஆம் ஆண்டு நாடு திரும்பி மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் உறவினர் வீடு ஒன்றில் வாழ்ந்து வரும் குடும்பத்தினருக்கு இலங்கை அகதிகள் புணர்வாழ்வு மற்றும் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் ஒப்பர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உதவியுடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மற்றும் நவீன தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

WhatsApp Image 2025 01 23 at 09.02.17

மண்முனை மேற்கு பன்சேனை கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்  பன்சேனை கிராம அபிவிருத்தி அமைப்பின் தலைவர் கமலநாதன் ரகுகரன் தலைமையில் தனியார் விடுதியில் 22.01.2025 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

WhatsApp Image 2025 01 22 at 12.21.47

மட்டக்களப்பில் உணவு உரிமைகள் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த அடிப்படை மதிப்பீட்டு அறிக்கை  கையளிக்கப்பட்டது. பியன் (FIAN) நிறுவனத்தின் உணவு உரிமைகள் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த அடிப்படை மதிப்பீட்டு அறிக்கையானது பியன் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் எஸ்.விஸ்வலிங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 10 மாவட்டத்தில்  வீட்டு உணவு பாதுகாப்பின்மை மற்றும் உணவு முறைகளை 20  பிரதேச செயலக பிரிவுகளில் ஆறுமாத காலம் மேற்கொண்ட மதிப்பீட்டு அறிக்கை வை.எம்.சி. ஏ மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான தெளிவூட்டல் வழங்கப்பட்டது.