- Details
- 15views

மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள் கிரான் பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்கான கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஜி பிரணவன் தலைமையிலான குழுவினர் மக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
- Details
- 18views

மட்டக்களப்பு மண்முனை போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபம் திறப்பு விழாவானது 03.01.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மண்டபத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு மண்முனை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- Details
- 11views

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் எஸ்.ஏ.சசிகரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27.12.2024 அன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நான்காம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் நடைபெற்றது.
- Details
- 12views

புதிய அரசாங்கத்தினால் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய ஐஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 01.01.2025 அன்று காலை இடம் பெற்றது.
- Details
- 11views

சுனாமி பேரலையினால் உயிர்நீத்த மக்களை நினைவு கூறும் முகமாக 26.12.2024 அன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பிரதேசசெயலகப்பிரிவுகளை சேர்ந்த 68 கிராம சேவகர் பிரிவுகளில் சுனாமி அனர்த்தம் பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது.





