- Details
- 10views

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முதலீட்டாளார்களுடன் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் 11.12.2024 அன்று இடம்பெற்றது.
- Details
- 7views

காத்தான்குடி மீடியாபோரத்தின் பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்குமிடையில் சினேகபூர்வ சந்திப்பொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
- Details
- 5views

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செலயக பிரிவில் சமுர்த்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட ஜயவிமன ரன்விமன வீடுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் கையளிக்கப்பட்டது.
- Details
- 5views

மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய ஜஸ்டினா முரளிதரன் அவர்களது தலைமையில் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி. நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி) அவர்களது ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 7views

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு 10.12.2024 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. அருவி பெண்கள் வலையமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வின் முதல் நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டு பிரதான நிகழ்வு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது. பெண்களிற்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்ட 16 நாள் வேலைத்திட்டமானது அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஐஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.





