- Details
- 10views

புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னேடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக கிளீன் ஶ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டம் தொடர்பான தெளிவூட்டல்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி) ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 16.01.2025 அன்று இடம்பெற்றது.
- Details
- 11views

மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கல் குழுக்கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 16.01.2025 அன்று இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தில் சுற்றுச்சூழல் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் எஸ்.உதயராஜன் வழங்கினார். மேலும் மாவட்ட மட்டத்தில் தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பாக துறைசார் நிபுனர்களுடன் கலந்துரையாடப்பட்டு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
- Details
- 4views

இந்தியா இலங்கை 75 வருட ஆண்டு கால இராஜதந்திர உறவை முன்னிட்டு இந்தியாவிலிருந்து "அன்புடனும் அக்கறையுடனும்' எனும் தொனிப்பொருளில் கடந்த மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்படவுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக 750 உலர் உணவுப் பொதிகள் மாவட்ட செயலத்திற்கு வந்தடைந்துள்ளன.
- Details
- 9views

மட்டக்களப்பு கிரான் குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை கடந்த 01.06.2023 அன்று தனது கெத் லேப் சேவையினை ஆரம்பித்தது 18 மாதங்கள் கடந்த நிலையில் 2000 நோயாளர்களுக்கு மேல் இலவச இருதய சிகிச்சைகளை மட்டக்களப்பு போதானா வைத்தியசாலை இருதய மருத்துவப் பிரிவுடனும், கல்முனை ஆதார வைத்தியசாலை வசதிகளையும் பயன்படுத்தி மிகச்சிறப்பாக செயற்பட்டுவருகின்றது.எமது கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் இச்சேவையானது பெரும் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். கடந்த காலங்களில் மட்டக்களப்பில் இருந்து யாழ்பாணம் சென்றே இச்சேவையினை மட்டக்களப்பு வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவு மேற்கொண்டு வந்திருந்தது. தற்போது எமது பிரதேசத்திலும் இச்சேவை காணப்படுவதனால் மிக வேகமாக எமது மக்களுக்கு சேவை வழங்கக்கூடியதாக உள்ளது.
- Details
- 9views

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகரிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்குடன் மாநகரத்தை அழகுப்படுத்தும் பணிகள் 07.01.2025 அன்று மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.





