WhatsApp Image 2024 12 23 at 12.34.05

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலகத்தில் அமையப்பெற்றுள்ள இலங்கை வங்கியின் கிளை 23.12.2024 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வங்கியின் மட்டக்களப்பு கிளையின் முகாமையாளர் தாட்சாயினி பவான் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஜஸ்டினா யுலேகா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், வங்கியினை நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

WhatsApp Image 2024 12 23 at 16.23.21

புகழ்பெறா வீரர்களாக சேவையாற்றுபவர்களே மத்தியஸ்தர் சபை உறுப்பினர்கள் என மட்டக்களப்பில் இடம்பெற்ற நீதியமைச்சும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து நடாத்திய 34 வது தேசிய மத்தியஸ்த தின நிகழ்வு 23.12.2024 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற போது மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி ஜஸ்டினா முரளிதரன் தனது பிரதம அதிதி உரையின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Image 2024 12 17 at 14.02.39

மட்டக்களப்பு மாவட்ட செயலக கட்டடத் தொகுதியில் சகல திணைக்களங்களின் பணிகளும் செயப்படத் தொடங்கியுள்ள நிலையில் அவற்றை இணைக்கும் தொழில்நுட்ப கட்டமைப்பை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் 17.12.2024 அன்று பார்வையிட்டார். மாவட்ட செயலகத்தின் தொழில்நுட்ப பிரிவு உத்தியோகத்தர்களினால் தொழில்நுட்ப கட்டமைப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அங்குள்ள தொழில்நுட்ப கட்டமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அவை எவ்வாறு ஒவ்வொரு திணைக்களத்துடனும்  தொழில்நுட்ப வசதிகளுக்காக இணைக்கப்பட்டுள்ளன போன்ற  விடயங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருக்குத் தெளிவுபடுத்தப்பட்டன.

WhatsApp Image 2024 12 18 at 15.56.49

மட்டக்களப்பு மேற்கு கரடியனாறு கரடியன்குளம்  ஆத்மகணானந்தா வித்தியாலயத்தில் ஒளிவிழா நிகழ்வானது மடக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 18.12.2024 அன்று இடம்பெற்றது. மாவட்டத்தில் அதி கஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான ஆத்மகணானந்தா வித்தியாலயலத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில் ஒளிவிழா நிகழ்வு நடைபெற்றது.

WhatsApp Image 2024 12 17 at 13.12.10

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளிவிழா நிகழ்வுகள் 17.12.2024 அன்று புதிய மாவட்டசெயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்த்  அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஐஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜனி முகுந்தன், பனிச்சையடி அனைத்துலக அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி  வின்சேஸ்லஸ், திராய்மடு மெதடிஸ்த தேவாலயத்தின் அருட்பணியாளர் சுதாகரன், திராய்மடு சிமர்னா தேவாலயத்தின் சிரேஸ்ட போதகர் எஸ்.வசந்தகுமார் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.