- Details
- 11views

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் 02.12.2024 அன்று மட்டக்களப்பு செயலகத்தின் அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைருமான அருண் ஹேமசந்திர அவர்களது தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஐஸ்டினா முரளிதரன் அவர்களது ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற அனர்த்த முகாமைத்து குழு கூட்டத்திற்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழா, முஹம்மட் சாலி நளீம் ஆகியோர் கலந்து கொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர்.
- Details
- 7views

நாட்டின் தற்போதைய அசாதாரண காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலைமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க அவர்கள் 29.11.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் உட்பட்ட குழுவினருடன் கலந்துரையாடினார்.
- Details
- 2views

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களது தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலின் போகு மாவட்ட அரசாங்க அதிபர் இந்த அனர்த்தத்தில் சிக்குண்டு பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக உடன் செயற்படுமாறு அரச திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
- Details
- 7views

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயும் உயர்மட்ட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
- Details
- 9views

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு சக்கர நாற்காலிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் 25.11.2024 அன்று வழங்கப்பட்டது. பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையமானது பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை நோக்காக கொண்டு பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.





