WhatsApp Image 2024 11 23 at 10.04.39 1

மட்டக்களப்பில் இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் 2024/2025ம் ஆண்டுக்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும், மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  22.11.2024 அன்று நடைபெற்றது.

WhatsApp Image 2024 11 22 at 17.21.36 1

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சுயதொழில் அபிவிருத்தி நிலையம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மற்றும் கெவில்டாஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கமலேஸ் ஆகியோரினால் 22.11.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2024 11 19 at 19.15.15

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் அக்ஷன் யுனிடி லங்கா (AU LANKA) நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டமொன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஐஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  புதிய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அக்ஷன் யுனிடி லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஜீ.சுரேஸ் மற்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், பிரதேச செயலாளர்களான நமசிவாயம் சத்தியானந்தி, காசு சித்திரவேல், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சுதாகரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் நவநீதன், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ.முரளிதரன், பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாடு உத்தியோகத்தர், பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியகத்தின் உத்தியோகத்தர்,  அக்ஷன் யுனிடி லங்கா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 11 21 at 11.56.08

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஐந்து ஆண்டு திட்டத்தின் நூல் வெளியீட்டு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.11.2024 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. எதிர்வரும் 2028ம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ஐந்தாண்டு திட்டங்கள் தொடர்பான குறித்த நூலின் வன் பிரதிகள்  மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுக்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

WhatsApp Image 2024 11 19 at 13.39.19 1

பாசிக்குடா “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)”  வேலைத் திட்டம் தொடர்பான  முகாமைத்துவ கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் 19.11.2024 அன்று இடம்பெற்றது. பாசிக்குடாக் கடற்கரையை “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” ஆகத் தரமுயர்த்தும் வேலைத் திட்டம் தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சின் அனுசரணையில்   மேற்கொள்ளப்படவுள்ள குறித்த திட்டத்திற்காக கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே மற்றும் பாசிக்குடா ஆகிய இரு கடற்கரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.