- Details
- 7views

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த 2018ம் ஆண்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபரும் முகாமைத்துவ சபையின் தலைவருமான திருமதி ஜே. ஜே முரளிதரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் ஒழுங்கமைப்பில் 20.01.2025 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது பொருளாதார மத்திய நிலையத்திற்கான முகாமைத்துவ பொறுப்பு சபையின் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுர் உற்பத்தியாளர்களது மரக்கறி வகைகள், பழவகைகள் மற்றும் உள்ளூர் உணவு உற்பத்தி பொருட்கள் போன்றவற்றை நியாய விலையில் பெற்று, அதனை பொது மக்களுக்கு பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பித்துவைப்பது தொடர்பாகவும், களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தின் அவசியம் பற்றியும் ஆராயப்பட்டது.
- Details
- 20views

மட்டக்களப்பு மாவட்ட புலம் பெயர்வாளர் அமைப்பின் பங்குதாரர்களுக்கான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாட்ட செயலகத்தில் 17.01.2025 அன்று இடம்பெற்றது. வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.எஸ்.எஸ்.பி பிரசன்னா அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
- Details
- 11views

பதிவாளர் நாயக திணைக்களத்தின் கிழக்கு வலயத்திற்கு பொறுப்பான பிரதிப்பதிவாளர் நாயகமாக கடமையாற்றி வடக்கு வலயத்திற்கு பிரதிப்பதிவாளர் நாயகமாக செல்லவுள்ள பி.பிரபாகர் அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் 17.01.2025 அன்று மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்றது. பிரதி பதிவாளர் நாயகம் பி.பிரபாகரன் கடந்த ஒன்பது மாதங்களே கடமையாற்றிய காலத்தில் அளப்பெரிய சேவையினை கிழக்கு மாகாணத்திற்கு ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவருடைய வருகையின் பின்னர் சகல ஆவணங்களும் கணனி மயமாக்கப்பட்டது,அத்தோடு புதிய மாவட்ட செயலகத்திற்கு தங்களின் காணி பதிவகத்தினை புதிய பரிணாமத்துடன் நிறுவிய பெருமைக்குரியவர் என உரையாற்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- Details
- 8views

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக அவர்களினால் 2025 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகை வேலைத்திட்டம் 17.01.2025 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பொதுமக்கள் வாகனத் தரிப்பிடத்திற்கு அருகாமையில் கமுகு மரங்கள் நடப்பட்டன.