- Details
- 697views

மட்டக்களப்பு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் அவசரமாக மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் அன்றாடம் கூலித்தொழிலில் ஈடுபடுகின்ற குடும்பங்களுக்கு உதவுவதற்காக அரசாங்க அதிபர் பணிமணையில் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு தற்போது செயற்பட்டு வருகின்றது.
- Details
- 672views

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் 25.03.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவியுமாகிய திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நிலையில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும் அதற்காக அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
- Details
- 645views

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட வலைத்தளம் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால் 23.03.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- Details
- 836views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினரும் அதன் போசகரான மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் போதனா வைத்தியசாலையின் பணியாளர்களான வைத்திய நிபுனர்கள், வைத்தியர்கள், வைத்திய உதவியாளர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், தாதியர்கள், மருத்துவ மாதர்கள், மருந்தாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஊழியர்கள், சிற்றுழியர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி கனேசலிங்கம் மற்றும் நிருவாகத்தினர் ஆகியோரின் அற்பணிப்பு மிக்க தியாக சிந்தனை கருணை மிக்க பணியினை மனதார உளம் கனிந்து பாராட்டினார்கள்.
- Details
- 836views

சிறுபோக வேளாண்மை பயிற்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் எவ்விதமான தடைகளும் இன்றி தங்களின் விவசாய பணிகளை தொடரலாம் என அரசாங்கம் பணிப்புரைவிடுத்ததை தொடந்து மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மட்டக்களப்பு சிறுபோக விசாயிகள் எவ்விதமான அச்சங்களும் இன்றி தங்களின் விவசாய காணிகளுக்கு செல்வதற்கான அனுமதி வழங்கும்படியாக பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.





