01 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்கும் பொருட்டு புதிய பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் திட்டமிட்டுள்ளார். இதற்கான தீர்மானங்கள் அண்மையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட கனியவள முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

05 resized

மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியஸ்தர் சபையினரின் முன்னேற்ற ஆய்வுக் குழுக் கூட்டம் 12.03.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக  கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

DSC 2170 resized

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின விழா பெருமளவு மகளிர் அமைப்புக்களின் பங்களிப்புடன் 11.03.2020 மாலை  வெகு விமர்சையாக இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திரு வீ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

dengue

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 29ஆந் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 06ஆந் திகதி வரை 100 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

01 resized

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் அடிப்படையில் அமைகின்ற அமைச்சுக்கள் அரச தினைக்களங்கள், மாவட்டச் செயலகங்களுக்கிடையிலான பாராளுமன்ற கணக்குக் குழுவினால் நடாத்தப்படுகின்ற நிதி நிருவாக நடவடிக்கைகளின் முன்னேற்ற முன்னடைவுகளை கண்காணிக்கும் 2018ம் நிதி ஆண்டுக்கான அகில இலங்கை ரீதியிலான மாவட்ட செயலகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.