- Details
- 1167views
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த பெப்ரவரி 15 ஆந் திகதி தொடக்கம் 2020 பெப்ரவரி 21 ஆந் திகதி வரையும் 134 பேர் டெங்குநோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.
அரச நிதி அபிவிருத்தியுடன் தனியார் துறையும் இணைந்தாலே முழு அபிவிருத்தி காணமுடியும் - மட்டு அரச அதிபர்
- Details
- 1296views
அபிவிருத்தி என்பது வெறுமனே அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மட்டும் பூரண அபிவிருத்தியாக கருத முடியாது. எமது சமூகத்திற்குத் தேவைப்படுவது தனியார் துறையினரின் வளர்ச்சியும் இணைந்திருக்க வேண்டும். இதன் மூலமே பூரணமான அபிவிருத்தியை அடைய முடியும். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு தாண்டவம்வெளி திவா ஹோம் கட்டட நிர்மாண கலை நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
- Details
- 924views
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று 25.02.2020 காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வரவேற்பு உரையுடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானகெளரவ சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 707views
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட இணைப்புக் குழுத் தலைவரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.வியாழேந்திரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 25.02.2020 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
- Details
- 732views
2020 இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கான வாக்களிப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச பிரிவுகளிலும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அம்மணி அவர்களின் மேற்பார்வையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.ஹாலித்தீன் அமீரின் நெறிப்படுத்துதலில் 22.02.2020 அன்று சிறப்பாக நடைபெற்றன.





