- Details
- 646views
இலங்கை அரசின் நிதியில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கெளரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டுதலில் சமூக வலுவூட்டல் அமைச்சர் கெளரவ ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் நெறிப்படுத்துதலில் யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு 450 வீடுகளை அமைக்க தீர்மாணிக்கப் பட்டுள்ளது.
- Details
- 704views
சாரணிய இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவுளின் 163 வது ஜனன தினம் மட்டக்களப்பு நகரில் பெருமளவு சாரணிய மாணவர்களின் பங்கேற்புடன் சிறப்பாக 22.02.2020 அன்று கொண்டாடப்பட்டது.
- Details
- 894views
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் வெகுவாக அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த பெப்ரவரி 07 ஆந் திகதி ஆந் திகதி தொடக்கம் 14 பெப்ரவரி வரையும் 170 பேர் டெங்குநோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.
- Details
- 822views
பிரதேச மட்டத்தில் கலைஞர்களையும் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டுதலில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் கலாசார நிகழ்வுகள் தற்போது நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த விசேட திட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு வவுணதீவு கலாசார பேரவையும், கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசார விழா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த 20.02.2020 அன்று நடைபெற்றது.
- Details
- 797views
மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் இன்று 18.02.2020 காலை 9.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.





