- Details
- 724views
அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கு அமைய பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில் தனது அமைச்சினூடாக இலங்கை பூராகவும் "கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்" எனும் தேசிய வேலைத்திட்டமானது 01.02.2020 அன்று குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அது போன்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைபெற்றது.
- Details
- 791views
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா 01.02.2020 அன்று மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
- Details
- 817views

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மூன்றாவது ஆண்டு சங்காபிஷேக சிறப்பு பூசை 31.01.2020 அன்று நண்பகல் பிரதம குரு சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
- Details
- 789views
கடல் தொழில் நீரியல் வழங்கல் அமைச்சினால் இலங்கைக்கான பின்லாந்து தூதுவராலயத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகத்தினை அபிவிருத்திசெய்யும் நோக்கில் 01.02.2020 காலை இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் திரு.ஹரி மெகரீனன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து மாவட்டம் தொடர்பான அபிவிருத்திகளை ஆராய்ந்தனர்.
- Details
- 1423views
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக கடமையினை பொறுப்பேற்ற அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் ஜாமி உஸ் ஸலாம் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினரை சந்தித்து ஆசியும் பெற்றுக்கொண்டார்.





