DSC 0244 resized

மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் இறால் மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களை அரச காணியில் ஆரம்பிப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கருணாகரன் அவர்களின் தலைமையில் 26.10.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

DSC 0141 resized

கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய பின்பற்ற வேண்டிய சகல விதி முறைகளையும் கடைப்பிடித்தது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வாணி விழா நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் அவர்களின் தலைமையில் 24.10.2020 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

DSC 0124 resized

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மழைகாலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தினைக் குறைத்து வடிந்தோடும் மழை நீரினை முறையாக சேகரித்து விவசாயம் மற்றும் குடிநீர் பாவனைக்காகப் பயன்படுத்துவதற்கான திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

DSC 0107 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். அவர்களுக்கான குடி நீர் வழங்குவதில் எதிர் காலத்தில் சிக்கல் ஏற்படவாய்ப்புள்ளதாக நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் மாவட்ட பொறியியலாளர் திரு.டி.ஏ.பிரகாஸ் தெரிவித்தார்.

DSC 0103 resized

சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் அமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட முதலுதவிக் கையேடு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கருணாகரன் அவர்களுக்கு 23.10.2020 அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.