- Details
- 356views
மட்டக்களப்பில் சமயங்களுக்கடையிலான பிணக்குகளைத் தணித்து சமாதானத்தினை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் சர்வத அமைப்புடன் சேர்ந்து பயணிக்கத்தயார் என மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திரு. கே. கருணாகரன் அவர்கள் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத அமைப்புக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்குமிடையிலான சந்திப்பொன்று 29.10.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
- Details
- 362views

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக கொரோனா தொற்று என மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதியானவர்கள் மாவட்டத்தில் 35பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றதாகவும் இதில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 31 பேரும் வெல்லாவெளி, பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலக பிரிவில் தலா ஒருவர் என அடையாளம் கானப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் மாவட்ட ஊடகப் பிரவுக்கு தெரிவித்தார்.
- Details
- 204views

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இரண்டாங்கட்ட தொடர்பாளர்கள் 500 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். பேலியகொட மீன்சந்தை கொரோனா தொற்றுடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் தொடர்புடைய இரண்டாங் கட்ட தொடர்பாளர்கள் 500 பேர் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தொற்று பரவாமலிருக்க இறுக்கமான தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- Details
- 448views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர்உணவு பொதிகளைப் பெற்றுக் கொடுக்க மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனடிப்படையில் முதல்கட்டமாக மாவட்டத்தில் செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக உலருணவுப் பொதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
- Details
- 350views

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புராதன இடங்கள் என தொல்பொருள் திணைக்களத்தினால் பட்டியலிடப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு அவற்றை அளவைமேற்கொண்டு எல்லைப்படுத்தவென விசேட குழுவொன்று தொல்பொருள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.





