- Details
- 333views

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020-2021 பெரும்போக நெற்செய்கை அறுவடை நெல்லினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்திலே 35 ஆயிரத்தி 460 மெற்றிக் தொன் நெல்லினைக் கொள்வனவு செய்வதற்கான ஆயத்தங்களை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது வரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2500 மெற்றிக் தொன் நெல்லினை மாத்திரமே அரச நெல் சந்தைப் படுத்தல் சபை கொள்வனவு செய்துவந்தது. விவசாயிகளினதும் நுகர்வோரினதும் நன்மை கருதியே இம் முறை அதிகளவான நெல்லினை கொள்வனவு செய்ய அரச நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.
- Details
- 315views

மட்டக்ளப்பு மாவட்டத்தில் 2020-2021 பெரும்போக நெற்செய்கை அறுவடை நெல்லினை அரச நெல் சந்தைப் படுத்தல் சபையினால் எதிர்வரும் ஜனவரி 18 ஆந்திகதி முதல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமாகிய திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் பெரும்போக நெல் அறுவடைகளை அரச நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்வது தொடர்பாக கூட்டம் 13.01.2021 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
- Details
- 315views

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் வலய கல்விப்பணிப்பாளர்களுக்கான அவசர கூட்டம் 11.01.2021 அன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
- Details
- 387views

சந்திவெளி திகிலிவட்டை இடையே பாலம் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் 12.01.2021 அன்று மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
- Details
- 322views

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாகிய Action Unity Lanka எனும் நிறுவனம் 11.01.2021 அன்று ஒரு தொகுதி Face Mask, Sanitaizer, Face Shield,Hand Wash Sink பொருட்களை மட்டக்களப்பு மாவட்டச்செயலகத்திற்கு வழங்கி வைத்தனர்.





