WhatsApp Image 2021 03 04 at 16.52.39

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயித்தியமலை, மற்றும் மண்டபத்தடி கமநல சேவை நிலையங்களுக்குட்பட்ட விவசாய நிலங்களில் சிறுபோக பயிற்செய்கை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு கே. கருணாகரன் அவர்கள் தலைமையில் 04.03.2021 அன்று வவுணதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

DSC 0603 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தடுப்பு செயலணிக் கூட்டம் 04.03.2021 அன்று மட்டக்களப்பு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

20210302 103314 resized

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்தின் கீழ் செம்மையான முன்னேற்றமிக்க இளைஞர்களை உருவாக்குவோம் என்ற செயற்றிடத்தின் அடிப்படையில் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் நாட்டிலுள்ள 332 கிராமிய மைதானங்களை புணரமைக்கும் தேசிய வேலைத்திட்டம் நாடுபூராகவும் 02.03.2021 அன்று சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

02 resized

அவுஸ்திரேலிய விருதுகள் உதவித்தொகை திட்டத்தினூடாக அரச உத்தியோகத்தர்கள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பினை அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

DSC 0379 resized

மட்டக்களப்பில் 2021 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிற்செய்கை எதிர்வரும் பங்குனி மாதத்தில் ஆரம்பிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் 24.02.2021 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.