DSC 0220 resized

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றத்திற்கான வலையமைப்பு மற்றும் Leo club of Cecilian's ஆகியன இணைந்து "ஆளுமை மிக்க தலைமைத்துவம்" எனும் தொனிப்பொருளில் ஒரு நிகழ்வினை நடாத்தியது. ஆளுமை மிக்க தலைமைத்துவத்துடன் பல துறைகளில் தலைமைத்துவத்தில் உள்ள பெண்களை கௌரவிப்பதும், பெண்பிள்ளைகளை ஊக்குவிப்பதும் இந் நிகழ்வின் முக்கிய நோக்கமாக உள்ளது.

WhatsApp Image 2021 03 23 at 12.56.19

"வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" என்ற கருப்பொருளுடன் இயங்கிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் உதவும் கரங்கள் அமைப்பு   மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு, சமூக அபிவிருத்தி, மாணவர்களுக்கான கல்வி அபிவிருத்தி, இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு போன்ற பல சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

WhatsApp Image 2021 03 23 at 12.59.55 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் தன்னார்வ  தொண்டு நிறுவனமான அருவி பெண்கள் வலையமைப்பு  மட்டக்களப்பு  அக்குரானை, மினுமினுத்தவெளி, முறுத்தானை  ஆகிய கிராம மக்களுக்காக  கட்டப்பட்ட  பொது   குடிநீர்   கிணறு  கையளிக்கும் நிகழ்வு 23.03.2021 அன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள்  வலையமைப்பானது  மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பிரதேச  செயலக பிரிவுகளில் சமூக மேம்பாட்டுக்கான  உட்கட்டமைப்பு  அபிவிருத்தி , மாணவர்களுக்கான  கல்வி ,சுகாதாரம் ,குடிநீர் , சமூக பாதுகாப்பு  போன்ற பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைத்து முன்னெடுத்து வருகின்றது.

WhatsApp Image 2021 03 23 at 13.02.56

மட்டக்களப்பு மாவட்டத்தில்  இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான பாம்பவுன்டேசன் நிறுவனமானது  மட்டக்களப்பு மாவட்டத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு   குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ்   மாவட்டத்தில்  சமுர்த்தி நிதி உதவிகளை பெற்று வரும்   குடும்பங்களுக்கும்  , குடிநீர் வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கும்  சுத்தமான குடிநீர் நீர்  வழங்கி வருகின்றது. இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்   பாம்பவுன்டேசன் நிறுவனம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையுடன் இணைந்து  மாவட்டத்தில் 14375 குடும்பங்களுக்கும் , 85 பாடசாலைகளுக்கும் சுத்தமான  குடிநீரினை வழங்கியுள்ளது.

DSC 0118 resized

அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் பொது நிர்வாக சுற்றுநிருபம் 18/2020 இற்கு அமைய அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர ( மட்டம் - 2 ) உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 3 மாத கால இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்பின் இறுதி நாள் நிகழ்வானது 23.03.2021 அன்று  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டோபா மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.