- Details
- 314views

புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பினர் மலேசியா தமிழர்பேரவை மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையோடு பறங்கியாமடுவில் மணல் குடிசைகளில் அடிப்படை வசதிகளற்று வாழ்ந்து வந்த 43 குடும்பங்களுக்கு வீடுகளையும் மலசல கூட மின்னிணைப்பு வாழ்வாதார வசதிகளையும் செய்துகொடுத்துள்ளனர். அந்த வீடுகளின் திறப்பு விழா புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றி அமல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 326views

கரையாக்கன்தீவு துர்க்கா இளைஞர் கழகத்தின் தலைமையில் ஏ.யூ லங்கா (AU Lanka) நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற "இளைஞர் தலைமையில் நீர் முகாமைத்துவம்" எனும் தொனிப்பொருளில் இளைஞர்கள் தலைமையிலான சுற்றுச்சூழல் நலன்சார்ந்த அனர்த்த அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் கைலிமடு கிழல் கமநல அமைப்பினால் கமநல அபிவிருத்தித் திணைக்களம், மண்முனை மேற்குப் பிரதேச செயலகம், மண்முனை மேற்குப் பிரதேச சபை, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன், சைல் பண்ட் ஸ்ரீலங்கா, சைல் பண்ட் நியூஸ்லன்ட் மற்றும் சைல் பண்ட் கொறியா ஆகிய அமைப்புக்களின் நிதிப் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட முதலாவது குளமே உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
- Details
- 347views

நாட்டைக் கட்டியெழுப்பின் சுபீட்சத்தின் நோக்கு எனும் அரசின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக கடந்த ஒரு வருட காலமாக பட்டதாரிப் பயிலுனர்களாக பயிற்சிகளை மேற்கொண்டவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு 09.04.2021 அன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 386views

பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான இயலளவு விருத்தி தொடர்பான பயிற்சி செயலமர்வின் முதலாம் கட்ட செயலமர்வானது 09.04.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
- Details
- 284views

"பிலவ" வருட தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு காலத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று தொடர்பான அச்ச உணர்வு முழுமையாக நீங்காத நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு மக்களை மிகுந்த அவதானத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.





