- Details
- 119views

தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 30.11.2021 மட்டக்களப்பில் இடம்பெற்றது.
- Details
- 161views

மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய மண்முனைப்பற்று பிரதேச இலக்கிய விழா 25.11.2021 வியாழக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
- Details
- 129views

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத் துறையினை அபிவிருத்தி செய்ய மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி சபையினால் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- Details
- 143views

சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒளிப்பு தினம் நவம்பர் மாதம் 25ம் திகதி உலகலாவிய ரிதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. உலகத்தில் பெண்களின் 40 வீதமான பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுப்பதற்கான விழிப்புனர்வு செயல்ப்பாடாகவே 25.11.2021 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காவியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் மாவட்ட செயலகத்தில் விழிப்புனர்வை ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களையும் வெள்ளை பட்டி அணியும் நிகழ்வினையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
- Details
- 126views

அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நல்லின மரங்களை நடும் தேசிய மரநடுகை திட்டமானது நாடளாவிய ரீதியில் மாவட்டங்கள் தோறும் இடம்பெற்று வருகின்றது.அதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இம்மரநடுகை திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.





