WhatsApp Image 2021 12 12 at 09.33.06அரச உத்தியோகத்தர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரதேச செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றி கிண்ண மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்தமையினை முன்னிட்டு மாவட்ட செயலக அணியின் விளையாட்டு வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2021 12 10 at 14.07.44

தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2022 - 2025 ஆண்டுகளுக்கான பங்களிப்பு மூலோபாயத் திட்டத்தினை உருவாக்கல் தொடர்பான பங்குதாரர்களுடனான கலந்துரையாடலொன்று 10.12.2021 அன்று  மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

WhatsApp Image 2021 12 08 at 13.02.32

தொற்றா நோயை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாவட்ட மட்ட குழு  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2021 12 09 at 22.54.54

சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு  நிகழ்வு மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட ஓசியன் ஸ்டார் லங்கா மற்றும் ஓசியன் ஸ்டார்  ரஸ்ட்இ யு.கே ஆகிய  நிறுவங்களின் பங்களிப்பின் ஊடாக மகாதேவன் அறக்கட்டளை நிதி அனுசரணையில் சிறுவர்களுக்கான  பவளம் ரட்ணம்  ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்திற்கான  அடிக்கல் நாட்டு  நிகழ்வு மட்டக்களப்பு கருவப்பங்கேணியில்  நடைபெற்றது.

262393325 201638412132823 2491258710500185710 n

இலங்கை கைத்தொழில் துறை மற்றும் புதிய வேலைத்திட்டங்களில் டிஜிட்டல் திட்டத்தை பயன்படுத்துவது தொடர்பிலான வழிகாட்டல்  வேலைத்திட்டம் நிகழ்நிலை ஊடாக தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது. அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விஸ்தரிக்கும் நோக்கிலேயே குறித்த வேலைத்திட்டத்தினை  தகவல் தொழில்நுட்ப நிறுவனம் முன்னெடுத்திருந்தது.