- Details
- 156views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலுள்ள யாட் வீதியில் அமைந்துள்ள கோட்டை பூங்காவின் வாவிக்கரை ஓரமாக 800 மீற்றர் நடைபாதை அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 77views

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போக விவசாயத்தில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்துஇ பயறு மற்றும் இஞ்சி பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் விசேட நிதிஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்து, பயறு மற்றும் இஞ்சி பயிர் செய்கை பண்ணப்பட்டுள்ளது.
- Details
- 135views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை உற்பத்தித்திறன் எண்ணக்கரு செயற்பாடுகளினூடாக மேலும் மேம்படுத்தவதற்காக செயலக உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சிகள் 8.11.2021 அன்று வழங்கப்பட்டன.
- Details
- 112views

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை வலுப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் ஐரோப்பிய யூனியனின் உதவியுடன்இ வீ எபக்ட் நிறுவனமும் காவியா பெண்கள் சுயதொழில் நிறுவனமும் இணைந்து கிரான் பிரதேசத்திலுள்ள பேரில்லாவெளி கிராமத்தில் அன்னம் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டு அச்சங்கத்திற்கு 32 ஆடுகள் கொண்ட பாதுகாப்பான ஆட்டுப்பண்ணை அமைத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் குறித்த சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது.
- Details
- 217views

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சில அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலரிற்குமாக 10.08.2021 அன்று திகதி புளியந்தீவு பொது சுகாதார பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.





