WhatsApp Image 2021 04 30 at 13.10.52

மட்டக்களப்பு மாவட்டத்தின் (Covid - 19) கொரோனா தடுப்பு செயலணியின் பிரிக்கேடியர் எஸ்.ஆர்.ஜீ.கமகே தனது 7 மாத சேவையினை பூர்த்தி செய்து தற்போது கம்பஹா மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் இராணுவ தரப்பு பிரதானியாக 30.04.2021 அன்று முதல் இடமாற்றம் பெற்றுச்செல்கின்றார்.

WhatsApp Image 2021 04 26 at 14.53.39

அரச தரப்பினால் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி மட்டக்களப்பில் கொரோனா வைரசின் மூன்றாவது பரவலை கட்டுப்படுத்த முடியாதென மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு கே. கருணாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் 26.04.2021 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

DSC 0562 resized

தொல்பொருள் பாரம்பரியம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகளுக்கும் இராணுவ உத்தியோத்தர்களுக்குமாக தொல்பொருளியல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது.  மட்டக்களப்பு மாவட்ட காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் அவர்கள் தலைமையில் 20.04.2021 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க பிரதம அதியாகக் கலந்து கொண்டு தொல்பொருள் பாரம்பரியம் தொடர்பான விளக்கமளித்தார்.

WhatsApp Image 2021 04 23 at 10.15.30

பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான இயலளவு விருத்தி தொடர்பான பயிற்சி செயலமர்வின் இரண்டாம் கட்ட செயலமர்வானது இன்று  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவினால் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பதவி நிலை உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் சமகால போக்கு "Cloud Transformation in the Government sectors" எனும் முழு நாள் பயிற்சி செயலமர்வானது 23.04.2021 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

DSC 0567 resized

ஜனாதிபதியின் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மக்களை சந்திப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் எதிர்வரும் மே மாதம் முதற்பகுதியில் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று கேட்டறிந்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. மேலும் ஜனாதிபதியின் இவ்விஜயத்தின்போது அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.