DSC 0115 resized

அரச பிரமாணம் மற்றும் சுற்று நிருபத்தின் அடிப்படையில் அரச நிறுவனங்களில் ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும் இருப்பு பொருட்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் பயன்படுத்தமுடியாத, பாவனைக்குதவாத பொருட்கள் பகிரங்க ஏல விற்பனை செய்யப்படும். இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான இருப்பு பொருட்களின் கணக்கெடுப்பின் பின்னரான பகிரங்க ஏல விற்பனை 22.03.2021 அன்று மாவட்ட செயலகத்திலே இடம்பெற்றது.

WhatsApp Image 2021 03 19 at 17.33.52

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கும் முதல் கட்ட நிகழ்வு 19.03.2021 அன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் திரு நேசகுமார் விமலராஜ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் திரு சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமத்தினை வழங்கிவைத்தார்.

DSC 0259 resized

இனங்களுக்கிடையே உணவுக் கலாசார பன்மைத்துவத்தின் ஊடாக சமாதான மேம்பாடு எனும் தொனிப்பொருளிலமைந்த நிகழ்வு மட்டக்களப்பில் 18.03.2021 அன்று இடம்பெற்றது. தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இலங்கையின் பாரம்பரிய சமூக கலாசார பண்பாட்டு ரீதியில் அந்தந்த சமூகங்களுக்கே உரித்தாக அமைந்த உணவுகள் பரிமாறப்பட்டிருந்தன.

DSC 0022 resized

மட்டக்களப்பில் உலக உணவுத் திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஆராயும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் 19.03.2021 அன்று வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் போது எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

WhatsApp Image 2021 03 18 at 10.55.09

மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு கே. கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில் களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைப்பது தொடர்பான விசேட கூட்டம் 18.03.2021 அன்று மாவட்ட செயலகத்தில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திரு சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.