DSC 0350 resized

மட்டக்களப்பு முதளைக்குடா மகிளடித்தீவு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டங்களை அமுல்படுத்தத் தேவையான நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் விசேட செயலமர்வு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு கே. கருணாகரன் அவர்கள் தலைமையில் 23.02.2021 அன்று மண்முனைப்பற்று டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

DSC 0062 resized

நாடளாவிய நிருவாக சேவைகள் மற்றும் இணைந்த சேவைத் தேர்வில் உச்ச மதிப்பெண்களை எய்தும் வகையிலும், அரச சேவையில் இணைந்துகொண்ட பணியாளர்கள் வினைத்திறன் போட்டி பரீட்சையினை இலகுவாக வெற்றி கொள்ளும் வகையிலும், இலங்கை அரச அலுவலக நிருவாக நடவடிக்கை தொடர்பாக 2020 ஆம் ஆண்டு வரை தாபனங்களால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை மற்றும் சுற்றறிக்கை மாற்றங்களை இற்றைப்படுத்தி இலங்கை நிருவாக வரலாற்றில் முதன் முறையாக “இலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும்” எனும் நூல் வெளியீட்டு விழா 21.02.2021 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

DSC 0811 resized

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக பூசை 19.02.2021 அன்று அரசாங்க அதிபர் திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் எளிமையான முறையில் கொரோனா தொற்றுக்காரணமாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்துக்கொண்டு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு ஜெகதீசக்குருக்கள் மற்றும் அவரது குழுவினரால் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது.

DSC 0213 resized

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்டரீதியான நிகழ்வு அதன் மாவட்ட ஆணையாளர் திரு வீ. பிரதீபன் தலைமையில் மட்டக்களப்பு நீரூற்றுப் பூங்காவில் பேடன்பவள் நினைவுச் சிலைக்கருகாமையில் 22.02.2021 அன்று இடம்பெற்றது.

DSC 0680 resized

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின்கீழ் “சுரகிமு கங்கா” ஆறுகளைக் காப்போம் தேசிய சுற்றாடல் வேலைத்திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தில் கல்லோயாத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.