- Details
- 379views

தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் திட்டத்திற்கமைய இலங்கையின் சகல மாவட்டங்களிலும் எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்படவுள்ளது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான எழுத்தாளர் சங்கம் உருவாக்குவது தொடர்பான கூட்டம் உதவி மாவட்ட செயலாளர் திரு ஏ. நவேஸ்வரன் அவர்களினதும், மாவட்ட கலாசார திணைக்களத்தினதும் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு. கே. கருணாகரன் அவர்கள் தலைமையில் 17.03.2021 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 315views

மியன்மாரில் இடம்பெறும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைந்த அமைப்புகளின் ஏற்பாட்டில் 16.03.2021 அன்று காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. மியன்மார் இராணுவ ஜீன்டா ஆட்சியுடன் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள அனைத்துவித உறவுகளையும் பரிமாற்றங்களையும் நிறுத்துமாறு கோரி இவ் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
- Details
- 346views

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களது நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 05.03.2021 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- Details
- 276views

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின்கீழ் இயங்கி வரும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் மாவட்டப் பிரிவினால், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினை மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் 09.03.2021 அன்று திறந்துவைத்தார்.
- Details
- 307views

போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம் எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பில் போதைப் பொருள் பாவனையினைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் உதவி மாவட்ட செயலாளர் திரு ஏ. நவேஸ்வரன் அவர்கள் தலைமையில் 05.03.2021 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.





