- Details
- 339views

மரங்களை நடுவோம் இயற்கையைப் பாதுகாப்போம், மரங்களின் பாதுகாவலன் மரநடுகை செயற்திட்டமானது 04.04.2021 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. பேடன் பவளின் 164 ஆவது ஜனன தினத்தினை நினைவு கூறும் முகமாக இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதின் ஒரு அங்கமான இருபத்தையாயிரம் மரக்கன்றுகளை நடும் செயற்திட்டத்தினை சக்தி, சிரச மற்றும் எம்.ரீ.வீ ஊடக அனுசரனையுடன், எஸ்லோன் லங்கா நிறுவனத்தின் பங்களிப்புடன் குறித்த மரநடுகை நிகழ்வானது 16 நாள் செயற்திட்டமாக நாடு பூராகவும் இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான வளாகத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
- Details
- 306views

தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியின் "நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்தின் ஊடாக சுற்றாடல் முகாமைத்துவத்தை பாதுகாத்தல், வனச்செய்கையினை மேம்படுத்துதல், காட்டு வளத்தை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் மரங்களை நாட்டி வளங்களை பாதுகாத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
- Details
- 286views

அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் முப்பெரும் விழாவில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளையும், சேவையிலிருந்து ஓய்வு பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களையும், பதவி உயர்வு பெற்ற உத்தியோகத்தர்களையும், பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வானது 27.03.2021 அன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.ஜி.முபாரக் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு கே.கருணாகரன் அவர்கள், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
- Details
- 370views

மட்டக்களப்பு கிரான் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில், "நாடும், தேசமும் உலகும் அவளே" எனும் கருப்பொருளுக்கமைவாக 27.03.2021 அன்று நடைபெற்றது. கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகமும் காவியா சுய அபிவிருத்தி பெண்கள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் திரு எஸ்.ராஜ்பாபு அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரசேத்தின் சாதனையாளர்கள், சமூகசேவைகளில் சிறப்புடன் ஈடுபட்டுவரும் பெண்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், கலை நிகழ்வுகளில் பங்குகொண்ட மாணவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
- Details
- 353views

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணி பிணக்குகளை தீர்ப்பது தொடர்பான விசேட வழிகாட்டுதல் செயலமர்வு காணி ஆணையாளர் நாயகம் கீர்த்தி கமகே தலைமையில் 25.03.2021 அன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் விசேட வழிகாட்டுதல் செயலமர்வில் மாவட்டத்தில் உள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பாகவும், காணி பிணக்குகளை தீர்ப்பது தொடர்பாகவும் விரிவான முறையில் கலந்துரையாடப்பட்டது.





